ஹாரி பாட்டர் ஹாக்ரிட் காலமானார் : சோகத்தில் ஹாலிவுட்

Death
By Irumporai Oct 15, 2022 01:53 AM GMT
Report

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த  ஹாக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபி கோல்ட்ரேன் மறைந்தார்.

ஹாரி பட்டர்

ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவாலை மையப்படுத்தி வெளிவந்த ஹாரிப்பாட்டார் படத்தினை யாரும் அவ்வுளவு எலிதில் மறக்க முடியாது .

ஹாரி பாட்டர் ஹாக்ரிட் காலமானார் : சோகத்தில் ஹாலிவுட் | Actor Robbie Coltrane Harry Potter Passes Away

குறிப்பாக அதில் நடித்த  ஹாரி பாட்டர், ஹெர்மாயினி, ரான் வீஸ்லி, டம்பிள் டோர் என பல முக்கியக் கதாபாத்திரங்களும் கிளைக்கதைகளும் கதைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த சீரிஸில் அமைந்திருக்கும்.

காலமானார் ஹாக்ரிட்

அந்த வகையில் இப்படங்களில் முதல் பாகத்தில் இருந்து பயணிக்கும் முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான ஹாக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபி கோல்ட்ரேன்  உயிரிழந்தார்.

72 வயது நிரம்பிய ராபி கோல்ட்ரேன்  பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்,வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாஃப்டா விருது வென்றுள்ள இவர்.

புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள இவரது எண்ணற்ற ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.