பாஜகவில் இருந்து விலகிய தமிழ் நடிகர் - மாற்று கட்சியில் பதவி
நடிகர் ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
ஆர்.கே.சுரேஷ்
தயாரிப்பாளராக இருந்து பின்னர் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். திரைத்துறையில் பயணிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
மக்கள் நீதி மையத்திலிருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்து பயணித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்ததோடு, கட்சியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது.
ஐஜேகே
அதன் பின்னர் ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு காவல்துறையால் தேடப்பட்டு வந்தார். வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவர், முன்ஜாமீன் பெற்று சென்னை திரும்பினார்.
அதன் பின்னர் கட்சியில் முக்கியத்துவம் அளிக்காத நிலையில், பாஜகவில் இருந்து விலகி இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கட்சியில் இணைந்த ஆர்.கே.சுரேஷுக்கு, அகில இந்திய அமைப்புச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து.