இத பத்தி தெரியாம போச்சு.. கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன் - ரெடின் கிங்ஸ்லி பகீர்!
நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது திருமணம் குறித்து பேசி அரங்கில் இருந்தவர்களை சிரிக்க வைத்தார்.
ரெடின் கிங்ஸ்லி
கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் நடித்தார். இந்த படத்தில் தனது அட்டகாசமான நகைச்சுவை நடிப்பால் அவர் ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து, அண்ணாத்த, பீஸ்ட், ஜெய்லர், பத்து தல, மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்ததார். ரெடின் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
விருது நிகழ்ச்சி
மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் பிரபல சேனல் ஒன்று ரெடின் கிங்ஸ்லிக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வழங்கி கௌரவித்தது.
அப்போது மேடையிலேயே ரெடினுக்கும், சங்கீதாவுக்கும் மாலையை கொடுத்து மாற்ற சொன்னார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத ரெடின் "இது தெரிந்திருந்தால் நான் திருமணம் செய்திருக்க மாட்டேனே. திருமண செலவு மிச்சம், சாப்பாடு செலவு மிச்சம்" என பேசி அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தார்.