பிரபல நடிகர் ரவிக்குமார் காலமானார்
நடிகர் ரவிக்குமார் காலமானார்.
நடிகர் ரவிக்குமார்
கேரளாவை சேர்ந்த நடிகர்களில் ஒருவர் தான் ரவிக்குமார்(71).
இவர், 70-களில் “உல்லாச யாத்ரா” என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் சில படங்களில் கதாநாயகராக நடித்திருக்கிறார்.
மேலும், மலபார் போலீஸ், ரமணா, மாறன், விசில், சிவாஜி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அத்துடன் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
காலமானார்
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் இன்றைய தினம் ரவிக்குமார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் காலமானதாக அவருடைய மகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
நடிகர் ரவிக்குமாரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.