தன்னைத் தேடி வந்த குரங்கை, அனுமனாக பாவித்து உணவளித்த நடிகர் ராம்சரண் - வைரலாகும் வீடியோ
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோக்களாகவும், ஆலியா பட் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
மேலும் படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நடிகர் ராம்சரண் ஷூட்டிங்கில் பிஸியாக மேக்கப் போட்டுக்கொண்டிருக்கிறார்.
அப்போது, அங்கு ஒரு குரங்கு ஒன்று வந்து நடிகர் ராம்சரண் பக்கத்தில் நின்றது. பிஸியாக மேக்கப் போட்ட ராம்சரண் இதைப் பார்க்கவில்லை. சற்று நேரத்தில் திரும்பி பார்த்த ராம்சரண், குரங்கை சற்று உற்று நோக்கி, பின்னர் அந்த குரங்கிற்கு உணவை வழங்கினார்.
இந்நிலையில், அந்த குரங்கை கடவுள் அனுமனாக பாவித்து உணவளித்ததாக வீடியோவை நடிகர் ராம்சரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -