மீண்டும் அரசியலில்.. ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவியா? ரஜினியின் சகோதரர் அளித்த பதில்!
நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ரஜினிகாந்த் சகோதரர்
நடிகர் ரஜினிகாந்த் ரசிகரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்ளவும், மீனாட்சியம்மன் கோவிலில் வழிபடவும் இன்று காலை மதுரைக்கு வந்தார் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா.
பின்னர் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று, ஜெயிலர் பட வெற்றிக்கு நன்றி தெரிவித்தும், ரஜினிகாந்த் நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழவும் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ரஜினி ரசிகரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு மாலை அணிவித்து ஆசி வழங்கினார்.
பேட்டி
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சத்திய நாராயணாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதில் "நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?' என்ற கேள்விக்கு, ``அரசியலுக்கு வரமாட்டார்" என்றார்.
`ரஜினிக்கு ஆளுநர் போன்ற பதவிகள் கிடைக்குமா?' என்ற கேள்விக்கு, "அது இறைவனின் முடிவு" என்றார். `ரஜினி - ஓ.பி.எஸ் சந்திப்பின் காரணம் என்ன?' என்ற கேள்விக்கு, `அதில் அரசியல் எதுவும் இல்லை' எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் சத்திய நாராயணா .