அந்த நடிகையுடன் நெருங்கி பழகிய ரஜினிகாந்த்; மனைவியுடன் விவாகரத்து வரை சென்றது? வெளிவந்த தகவல்கள்!
ரஜினிகாந்த் வாழ்க்கை விவாகரத்து வரை சென்றது என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பல ட்ரோல்களை சந்தித்தாலும் கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை பிடித்தார். தற்போது இவர் நடிப்பில் ஜெயிலர் என்ற படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
அமலாவுடன் காதல்
இந்நிலையில் இவர் குறித்த செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக இருந்த நடிகை அமலாவின் அழகில் மயங்கி அவரை காதலித்து வந்தாராம் ரஜினிகாந்த். அமலாவுடன் நடிக்கும்போது நெருங்கி பழகியதோடு மட்டுமல்லாமல் படு நெருக்கமாக போட்டோ ஷூட்டும் நடத்தியுள்ளாராம். அந்த போட்டோவில் பிகினி உடையில் ரஜினியின் தோலில் அமர்ந்திருப்பார் அமலா.
இந்த போட்டோக்கள் அன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாம். இந்த விஷயம் ரஜினியின் மனைவி லதாவிற்கு தெரியவந்ததும் மிகவும் மன வேதனை அடைந்தாராம். இந்த விவகாரம் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு போய்விட்டதாம். இதனால் மன வேதனை அடைந்த லதா ரஜினிகாந்த் இயக்குனர் கே. பாலசந்தரை சந்தித்து நடந்ததைக் கூறி அழுதாராம். அப்போது உடனடியாக ரஜினியை அழைத்த பாலசந்தர் மனைவி பிள்ளைகளுடன் ஒழுங்கா வாழு என்று எச்சரித்து அனுப்பினாராம்.
அதன் பின்னர் அந்த எண்ணத்தையே ரஜினி விட்டுவிட்டாராம். தற்போது அமலா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்த செய்திகளில் அனைத்தும் உண்மைதானா என்று தெரியவில்லை. இது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Siragadikka Aasai: நிறுத்துங்க அம்மா ரோகினியை அடிக்காதீங்க... பழியை தன் மீது சுமத்திய மனோஜ் Manithan

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan
