ரசிகர்களை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்
தனது இல்லம் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்து தீபாவளி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகாலை முதல் புத்தடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தின் முன்பு ரசிகர்கள் காலை முதலே திரண்டு இருந்தனர். இதையடுத்து ரசிகர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறி மகிழ்ச்சி படுத்தினார். மேலும் தனது ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று ரஜினி வீடு #rajini @rajinikanth @RIAZtheboss pic.twitter.com/XB4MJeljXm
— meenakshisundaram (@meenakshinews) October 24, 2022