விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் - ரஜினிகாந்த்!
விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேற்று முதலே நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தற்போது வியாகாந்தின் உடல் தீவுத்திடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் "அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம்.
ரஜினிகாந்த் உருக்கம்
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவர் அசாத்தியமான மன உறுதி கொண்ட ஒரு நபர். எப்படியும் உடல்நிலை தேறி மீண்டு வந்துவிடுவார் என நம்பினோம்.
ஆனால், அண்மையில் தேமுதிக பொதுக்குழுவில் பார்க்கும்போது எனது நம்பிக்கை சற்று சரிந்துவிட்டது. அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்.
தமிழ் மக்களுக்கு எண்ணற்ற நலன்களை செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்