‘83’ படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் போட்ட ட்வீட் என்ன தெரியுமா ?

rajinikanth 83movie
By Irumporai Dec 28, 2021 10:46 AM GMT
Report

1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாராகி உள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையில், பெரிய திரையில் வெளியிட வேண்டுமென காத்திருந்து டிசம்பர் 24-ம் தேதி தியேட்டரில் வெளியானது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் 83 திரைப்படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “83 என்ன ஒரு திரைப்படம். படம் பிராமதமாக உள்ளது. தயாரிப்பாளர்கள், இயக்குநர் கபீர் கான், கபில்தேவ், ரன்வீர் சிங், ஜீவா மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.