உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த நடிகர் ரஜினிகாந்த்? - வாக்களிக்க வராததால் பரபரப்பு
உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் என மொத்தம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் வழக்கமாக காலையிலேயே தனது ஜனநாயக கடமையை ஆற்றும் நடிகர் ரஜினிகாந்த் இந்த முறை இதுவரை வாக்களிக்க வரவில்லை. காலை வீட்டில் இருந்த அவர் புறப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஓட்டுச்சாவடிக்கு அவர் வராதது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரஜினி இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றும், வாக்களிக்க போவதுமில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பிரச்சனையால் மன உளைச்சலில் ரஜினி இருப்பதால் தான் இத்தகைய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.