நடிகர் ரஜினிகாந்தை சீண்டும் ப்ளு சட்டை மாறன் - கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
தமிழ் திரைப்படம் வெளியானால் அதை விமர்சிக்கும் பிரபலமான நபர் இந்த ப்ளு சட்டை மாறன்.
எதற்கும் அஞ்சாமல் வெளிப்படையாக யாருடைய திரைப்படம் என்றாலும் விமர்சித்து வரும் ப்ளு சட்டை மாறனை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வச்சு செய்வதும் அவப்போது அரங்கேறி வரும்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் பெரும் எதிர்பார்பில் காத்திருந்தனர்.
இந்தநிலையில் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது. இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பீஸ்ட் படம் குறித்து விமர்சனம் செய்த ப்ளு சட்டை மாறன் கண்டபடி விமர்சித்து விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் திரைப்படம் நன்றாக இருப்பதாக அவரது ரசிகர்கள் அறிவித்தாலும் பல தரப்பினரும் படம் மொக்கையாக இருப்பதாக தங்களது நெகடிவ் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தலைவர் 169 திரைப்படத்தை இயக்க உள்ளார்.
விஜய்யை தொடர்ந்து ரஜினி மாட்டினார் என்று ரசிகர்கள் பலரும் கலாய்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ப்ளு சட்டை மாறன் விஜய்யை அடுத்து ரஜினி நெல்சனிடம் மாட்டியுள்ளதாக மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இனிமே பயங்கரமா இருக்கும் என பீஸ்ட் வசனத்தை கேப்சனாக கொடுத்துள்ளார் மாறன்.
'இனிமே பயங்கரமா இருக்கும்' #Beast #BeastReview #Thalaivar169 #ActorVijay pic.twitter.com/fUw5AHJOHo
— Blue Sattai Maran (@tamiltalkies) April 15, 2022

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
