நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்
சென்னையில் இருந்து இன்று அதிகாலை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிகாந்திற்கு இரண்டாவது முறையாக மயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவினர் மூலம் சீறுநீராக அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதனையடுத்து மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் அரசியல் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் அவர் அமெரிக்கா செல்லவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டும் கொரோனா தாக்கம் காரணமாக உலக நாடுகள் விமான சேவைகளை முடக்கியதன் காரணமாக அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அவர் அரசின் அனுமதி பெற்று இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் அவர் அங்கிருந்து வேறொரு விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார்.
ஹாலிவுட் படிப்பிடிப்பு காரணமாக மகள் ஐஸ்வர்யா, மருமகன் நடிகர் தனுஷ் அமெரிக்காவில் இருக்கின்றனர். அவர்கள் ரஜினியுடன் இருந்து பார்த்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனைக்காக அவர் ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து ஓய்வு எடுத்த பின் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.