காவேரி மருத்துவமனையில் இருந்த ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்
Rajini
rajinikanth
By Irumporai
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த். கடந்த 28-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தலை சுற்றல் இருந்த காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவரது ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு அவருக்கு நீக்கப்பட்டதாக காவெரி மருத்துவமனை அறிக்கை வெலியிட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் 3 நாட்கள் சிகிச்சைக்குப் பெற்ற நிலையில் இன்று வீடு திரும்பினார். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது நடிப்பில் வரும் தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.