ரஜினி எடுத்த அதிரடி முடிவு : அதிர்ச்சியில் ரசிகர்கள் - விரைவில் அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தின் இயக்குனரை முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி தற்போது புதிய படங்களில் ஏதும் நடிக்காமல் ஓய்வில் உள்ளார். இதற்கிடையில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா - நடிகர் தனுஷ் விவாகரத்து நிகழ்வு அவரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ரஜினி நேரடியாக சொன்னாலும் இருவரும் கேட்பதாக இல்லை என சொல்லப்பட்டது. குடும்ப பிரச்சனையால் மன வேதனையில் இருக்கும் ரஜினி அதிலிருந்து மீள தனது அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளாராம்.
இதற்காக கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், வெங்கட் பிரபு, தேசிங் பெரியசாமி ஆகியோரிடத்தில் கதை கேட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் பால்கி இயக்கத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.