சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்.. வீட்டையே ஆத்திரத்தில் அடித்து நொறுக்கிய ரஜினி - நெருங்கவே பயந்த குடும்பம்!
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அடாவடித்தனமாக நடந்துக்கொண்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஆரம்பகாலத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தவர் ரஜினிகாந்த். நடிப்பின் மீது மிகுந்தன ஆர்வம் கொண்ட இவர் பின்னர் தந்து வேலையை விட்டுவிட்டு சென்னையில் இருக்கும் சினிமா கல்லூரியில் சேர்ந்து நடிப்பு கற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் இயக்குனர் பாலச்சந்தர் கண்களில் பட்டார், அப்பொழுது இவரது உடல்பாவனை, ஸ்டைலால் ஈர்க்கப்பட்டார்.
பின்னர் அவர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நடிக்கவைத்து சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதனப்பிறகு சினிமாவில் கிட்டத்தட்ட 170 படங்களில் நடித்துள்ளார், இவருக்கென்று தண்ணி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
வீட்டை நொறுக்கிய ரஜினி
இந்நிலையில், இவர் வாழக்கையை வெறுத்து விரக்தியில் வீட்டை அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. பொதுவாகவே ரஜினி நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவர் அடைந்த உச்சம் மற்றும் புகழால் இவர் எங்கு சென்றாலும் கூட்டம் கும்பலும், படங்களில் வரிசையாக நடித்து பிஸியாக இருந்துள்ளார்.
இதனால் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை வெறுத்த இவர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினாராம். அப்பொழுது யாருமே பக்கத்தில்கூட நெருங்க முடியவில்லையாம். எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை எல்லாமே போதும் என கத்திக்கொண்டே அடித்து நொறுக்கியிருக்கிறார். இதனை கண்டு பயந்த இவரது மனைவி லதா, இவரது குருநாதரான பாலச்சந்தருக்கு போன் போட்டுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த பாலச்சந்தர் பார்த்து அதிர்ந்துள்ளார், வீட்டில் பாலச்சந்தரின் புகைபடத்தை தவிர மற்ற எல்லாத்தையும் உடைத்துள்ளார். உடனே, இயக்குனர் என்னை மட்டும் ஏன் விட்ட. அதையும் உடைச்சிருக்க வேண்டியதுதானே என கேட்டிருக்கிறார்.
அதற்கு ரஜினி நான் எங்கேயோ நின்மதியாக இருந்தேன் இவ்வளவு புகழை ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு இயக்குநர், வாய்ப்புக்காக அவன் அவன் அலையிறான், உனக்கு வாய்ப்பும், புகழும் கிடைத்துள்ளது அதை ஒழுங்கா பயன்படுத்து என்று கூறியுள்ளார். அதனப்பிறகு தான் ரஜினி முழுமையாக சாந்தம் அடைந்தராம்.