தேசிய திரைப்பட விருது - நடிகர் சூர்யாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!

Rajinikanth Suriya Twitter
By Nandhini Jul 23, 2022 10:14 AM GMT
Report

நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய திரைப்பட விருது

நேற்று கடந்த 2020-ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இதில், 30 மொழிகளிலிருந்து மொத்தம் 305 படங்கள் தேசிய விருதுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அதே படத்தில் அபர்ணா பாலமுரளியும் பெற்றிருக்கிறார்கள். அப்படத்தில் இசை அமைத்த ஜிவி பிரகாஷும் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

சூர்யாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

நேற்று இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து கூறினார்.

மேலும், தேசிய விருதுகளை தமிழின் சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் சில பெண்களும் மற்றும் மண்டேலா ஆகிய படங்களின் கலைஞர்கள் பெற்றுள்ளனர். இதில் சூரரைப் போற்று சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இந்த 3 படக்குழுவினருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் சூர்யாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சூர்யாவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Suriya - Rajinikanth

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என்று பதிவிட்டுள்ளார்.