மிக்ஜாம் புயல் பாதிப்பு - 4 மாவட்ட மக்களுக்கு 'நடிகர் ரஜினிகாந்த்' உதவி!
புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தொடர்ந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ரஜினிகாந்த் உதவி
இந்நிலையில் நேற்று தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடினார் நடிகர் ரஜினிகாந்த். எனவே தனது பிறந்தநாளை முன்னிட்டு, புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை மற்றும் ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
15க்கும் மேற்பட்ட வாகனங்களில், அரிசி, ரவை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்களும் பாய், பெட்ஷீட் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் அந்தந்த மாவட்டத்தின் ரசிகர் மன்றம் மூலமாக வழங்கப்பட்டது.