சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கவர்னர் பதவி? பாஜக போடும் மாஸ்டர் பிளான்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை கொண்டாடினார்.
ரஜினிகாந்த்
அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை ரஜினி சந்தித்துப் பேசினார். அரசியல் பற்றி பேசியதாக அவர் கூறியதற்கு விமர்சனங்கள் எழுந்தன.

எனவே, பாஜகவின் ஆதரவைப் பெற்ற ரஜினிகாந்திற்கு விரைவில் ஆளுனர் பதவி வழங்கப்படலாம் என ஒரு தகவல் வெளியாகிறது. சமீபத்தில் மாநிலங்களை நியமன எம்பியாக இளையராஜா நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் பதவி
அதேபோல் ரஜினியும் வட மாநிலத்தில் ஒரு ஆளுநர் பதவி காலியாக உள்ளதாகவும் அதற்கு ரஜினியை நியமிக்கலாம் என தகவல் வெளியாகிறது.
ஆனால், ரஜினி ஆளுனர் பொறுப்பு ஏற்பட்டால் அவரால் சினிமாவில் நடிக்க முடியாது என்பதால் இந்தத் தகவல் வதந்தியாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினி நெல்சன் இயக்கத்தில் அவர் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.