நடிகர் ரஜினியின் வழங்கப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் திரும்ப தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!

rajini party commission symbol
By Jon Mar 13, 2021 12:13 PM GMT
Report

மக்கள் சேவை கட்சிக்கு அளிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை திரும்ப பெற தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு தான் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்தார். அந்த கட்சி ஆன்மிக அரசியல்தான் தனது பாதை என்று தெரிவித்திருந்தார். அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

அதன்பின் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதனையடுத்து, ரஜினிகாந்த் தொடங்கப்போகும் கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்று பெயர் வைக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் கட்சியின் சின்னமாக ஆட்டோ ரிக்‌ஷா கிடைத்தது.

  நடிகர் ரஜினியின் வழங்கப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் திரும்ப தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு! | Actor Rajini Auto Rickshaw Symbol Commission

திடீரென்று கட்சி தொடங்கும் எண்ணத்தை ரஜினி கைவிட்டார். எனவே, ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னம் மக்கள் சேவை கட்சி சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்கள் சேவை கட்சியின் கோரிக்கையை ஏற்று, ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை திரும்ப பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.