அதிமுக-விலிருந்து தவெக-வில் இணைந்த பிரபல நடிகர்... 2 மாதத்தில் புது கட்சியா?
அதிமுக-விலிருந்து முதல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பிரபல நடிகர் இணைந்திருக்கின்றார்.
நடிகர் மீசை ராஜேந்திரன்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் மீசை ராஜேந்திரன். எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தாலும் மீசை ராஜேந்திரன் ஞாபகம் வந்தால் வில்லனாகத் தான் தோன்றும்.
நடிகர் மீசை ராஜேந்திரன் 31 ஆண்டுகளாக விஜயகாந்தின் நற்பணி மன்றத்திலும், 20 ஆண்டுகளாக தேமுதிக கட்சியிலும் இருந்தவர், சமீபத்தில் இக்கட்சியிலிருந்து விலகினார்.

அவர் எழுதிய கடிதத்தில் விசுவாசத்திற்கு இடம் இல்லாததால் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். கடந்த 3 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட மீசை ராஜேந்திரனுக்கு இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை... இந்த அதிருப்தியினால் கட்சியிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகின்றது.
தவெக-வில் இணைந்த மீசை ராஜேந்திரன்
தேமுதிக-விலிருந்து விலகிய இவர் அதிமுக-வில் இணைந்தார். தற்போது அதிமுக-வில் உள்ள எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் மீசை ராஜேந்திரனும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களாக அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது மீசை ராஜேந்திரனும் இணைந்துள்ளார்.

அதிமுகவில் கடந்த ஏப்ரல் மாதம் இணைந்து 2 மாதங்கள் கூட முடியாத நிலையில் அதிமுகவிலிருந்தும் விலகியிருக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் அதிகாரிகள்! மேல் நீதிமன்றின் உத்தரவு IBC Tamil
அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் : மேலும் இரண்டு விமானங்கள் விரட்டியடிப்பு IBC Tamil