சாப்பாட்டுக்கே வழியில்லை..என் புருஷன் நினைத்த மாதிரியே என் நிலைமை ஆகிவிட்டது - நடிகர் ராஜசேகர் மனைவி கண்ணீர்

Tamil Cinema Tamil TV Serials
By Thahir Mar 01, 2023 06:25 AM GMT
Report

சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிப்பதாகவும் என் கணவர் நினைத்த மாதிரியே என் நிலைமை மாரிவிட்டதாகவும் நடிகர் ராஜசேகர் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கடைசி வரை நிறைவேறாத ஆசை 

1980 மற்றும் 1990 உள்ளிட்ட கால கட்டங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் ராஜசேகர் இருந்து வந்தார். நடிகராக மட்டுமின்றி திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பிறகு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார்.

இந்த நேரத்தில் தான் தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடிகர் ராஜசேகர் காலமானார்.

தான் உயிரிழப்பதற்குள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் இவருடைய கடைசி ஆசையாக இருந்துள்ளது.

இறந்து போவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் வாங்கி வீட்டில் குடியேறுவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். ஆனால் அவரின் உடல் மட்டும் அந்த வீட்டில் வைக்கப்பட்டு பின்னர் எடுத்துச் செல்லப்பட்டது. இவரின் உயிரிழப்புக்கு பிறகு அவரது மனைவி தாரா உறவுகளின் ஆதரவு இன்றி தனியாக இருந்து வருகிறார்.

விவாகரத்து - 2வது திருமணம் 

இந்த நிலையில் சமீபத்தில் அவரது மனைவி தாரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய கணவர் ராஜசேகர் ஒளிப்பதிவாளராக தான் சினிமாவிற்குள் நுழைந்தார். அதன் பின் பல படங்களை இயக்கினார்.

மேலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது இதையடுத்து அவர் சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார். சினிமாவில் சம்பாதித்த மொத்த தொகையையும் தனது குடும்பத்திற்காகவே செலவழித்து விட்டார்.தனக்காக எதுவுமே அவர் சேர்த்து வைக்கவில்லை.

தன்னுடைய தங்கைகளின் திருமணத்திற்காக நிறைய நகைகளை போட்டு அந்த நேரத்தில் திருமணம் செய்து வைத்தார். அதன் பின் நடிகை சரண்யாவை தான் முதலில் திருமணம் செய்துள்ளார்.

பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்களாம். இதன் பின்னர் தான் 2வதாக தாராவை நடிகர் ராஜசேகர் திருமணம் செய்துள்ளார்.

ஆசைப்பட்டு வாங்கி வீடு 

சினிமாவில் இருந்த போது தன் குடும்பத்திற்காக பணத்தை தண்ணீர் மாதிரி செலவழித்த நிலையில் சினிமாவை விட்டு ஓய்வு எடுத்த பின்னர் தான் தனக்கென்று ஒரு சொந்த வீடு இல்லையே என்று அவர் வருத்தப்பட்டுள்ளார்.

சாப்பாட்டுக்கே வழியில்லை..என் புருஷன் நினைத்த மாதிரியே என் நிலைமை ஆகிவிட்டது - நடிகர் ராஜசேகர் மனைவி கண்ணீர் | Actor Rajasekhar Wife Tara Interview

இதனால் நொந்து போன ராஜசேகர் தனது மனைவி தாராவிடம் திடீரென்று எனக்கு ஏதாவது ஆனால் உன் நிலைமை என்ன ஆகும் என்று அடிக்கடி புலம் கொண்டிருந்தாராம். காலம் கடந்த பின்னர் புலம்பி என்ன ஆகப்போகுது விடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று அவருடைய மனைவி தாரா கூறியதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த போது கடைத்த பணத்தை வைத்து தான் கொஞ்சம் வங்கியில் கடன் வாங்கி வடபழனியில் 500 சதுர அடியில் பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். இதனிடையே அவர் அந்த வீட்டில் பால் காய்ச்சுவதற்குள் அவர் உயிரிழந்தார் என்று தாரா தெரிவித்தார்.

கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படும் மனைவி 

மேலும் அவர் இறந்து போன இரண்டாவது மாதத்திலேயே வங்கியில் இருந்து வந்துவிட்டார்கள். மீதி கடனை எப்படி கட்டுவீங்க என்று கேட்டு என்னை தொல்லை செய்தார்கள். பின் நான் அங்கங்கே பணத்தை புரட்டி கட்டினேன்.

வீட்டின் மொத்த மதிப்பு 60 லட்சம் ஆரம்பத்தில் 30 லட்சம் ரூபாய் கட்டினோம். இதுவரை 35 லட்சத்துக்கு மேல கட்டி விட்டோம். மீதி பணத்துக்கு நான் எங்கே போவேன் என்று தெரியவில்லை. எனக்கும் வயசு ஆயிடுச்சு இனி என் சாப்பாட்டுக்கே என்ன பண்ணுவது என்று தெரியாத சூழ்நிலையில் இருக்கிறேன்.

இந்த நிலையில் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

எனக்கு இதுவரை யாரும் உதவி செய்யவில்லை. இரண்டு நாளைக்கு முன்னாடி தான் வங்கியில் இருந்து பேசினார்கள்.

அந்த வீட்டை ஏலத்தில் எடுக்க வங்கி அசோசியேஷனிலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அதனால் நீங்கள் முறைப்படி வீட்டை காலி செய்து தந்துவிடுங்கள்.

இல்லை என்றால் போலீசை கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தார்கள்.

என்னுடைய கணவர் பயந்தது போலவே என்னுடைய நிலைமை இப்போது நடந்து ஆகிவிட்டது. எந்த நேரத்திலும் என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி நடுரோட்டில் கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள்.

என்னுடைய கடைசி வேண்டுகோளாக சினிமாவில் இருப்பவர்களுக்கும், முதலமைச்சருக்கும் கண்ணீரோடு கோரிக்கை வைக்கிறேன்.

இந்த பிரச்சனையிலிருந்து என்னை மீட்டு இன்னும் இருக்கிற சில நாட்களில் என்னை நிம்மதியாக வாழ வைக்க உதவி செய்யுங்கள் என்று கண்ணீரோடு ஊருக்கமாக பேசியிருக்கிறார்.