சோகத்தில் முழ்கிய நடிகர் ரகுமான் குடும்பம்..திரையுலகம் இரங்கல்!
கே.பாலச்சந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தின் கதநாயகானாக அறிமுகமான ரகுமான் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இதனிடையே கார்த்திக் நரேனின் ‘துருவங்கள் பதினாறு’ படம் இவருக்கு நல்ல திருப்புனை திரைப்படமாக அமைந்தது.
80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ரகுமான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி காலமானார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்த அவருக்கு வயது 84. பெங்களூருவில் காலமான இவரது இறுதிச்சடங்கு கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரகுமானின் குடும்பத்தில் நடந்த இந்த இழப்புக்கு, திரைப் பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.