விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆசை.. அப்படித்தான் நினைப்பார் - ராகவா லாரன்ஸ் பளீச்!

Raghava Lawrence Rajinikanth Vijay Tamil Cinema
By Jiyath Sep 04, 2023 03:02 PM GMT
Report

சந்திரமுகி 2

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, மாளவிகா, நாசர், வினீத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆசை.. அப்படித்தான் நினைப்பார் - ராகவா லாரன்ஸ் பளீச்! | Actor Rahava Lawrence About Super Star Title

இந்த படம் பெரும் வசூல் வேட்டையும் நடத்தியது. தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. இதில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். மேலும் வடிவேலு, லக்ஷ்மி மேனோன், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் சந்திரமுகி படத்தின் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் அண்மையில் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் சூப்பர் ஸ்டார் விவகாரம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

ராகவா லாரன்ஸ் பேட்டி

அதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ் "விஜய் சாரை சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார்களே, அவருக்கு அந்த ஆசை இருக்கிறதா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் அவருக்கு அந்த ஆசை எல்லாம் இல்லவே இல்லை. அவர் அவராகவே வரவேண்டும், அவராகவே ஜெயிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்.

விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆசை.. அப்படித்தான் நினைப்பார் - ராகவா லாரன்ஸ் பளீச்! | Actor Rahava Lawrence About Super Star Title

நமக்கு நாம்தான் போட்டி என்று மேடைகளில் கூட சொல்லியிருக்கிறார். விஜய் சாரை நான் எப்போது சந்தித்தாலும் 'தலைவர் ரஜினிகாந்த் எப்படியிருக்கிறார்? உடல்நலம் எப்படி இருக்கிறது' என்றுதான் கேட்பார்.

அதேபோல விஜய்யை பற்றி ரஜினி சார் பேசும்போது 'பீஸ்ட் படம் பாத்தியா? வசூலில் எல்லாம் சூப்பராக இருக்கிறதாம்'பா.. படம் என்று ரஜினி சார் கூறினார்' என்று ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார்.