அரசியலில் நுழைய தயார்; எப்போது, யாருடன்? ராகவா லாரன்ஸ் விளக்கம்

Raghava Lawrence Rajinikanth Vijay Seeman
By Karthikraja Jun 12, 2026 05:31 AM GMT
Report

நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வர உள்ளதாகவும், தவெக சார்பில் திருச்சி கிழக்கில் போட்டியிட உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ்

இதில் பேசிய அவர், கடமையை செய் பலனை எதிர்பாராதே. திருச்சி கிழக்கில் நான் நிற்க வேண்டுமென்றால் நான் முதலில் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் எப்படி என் வாழ்க்கையில் வந்தது என்பதை கூறுகிறேன். 

அரசியலில் நுழைய தயார்; எப்போது, யாருடன்? ராகவா லாரன்ஸ் விளக்கம் | Actor Raghava Lawrence About His Political Entry

ஜல்லிக்கட்டில் சாப்பிடு போடுகிறேன். அதன் பின்னர் சீமான் அண்ணன் என் மீது விமர்சனம் வைக்கிறார். அவருக்கு நான் டிவீட் போடுறேன். பதிலுக்கு அவர் போடுறாரு. அப்போதுதான் என் வாழ்க்கையில் அரசியல் நுழைகிறது.

ரஜினி கட்சி தொடங்க முயன்றபோது, அவருடன் இணைய நினைத்தேன். ரஜினி கட்சி ஆரம்பிக்காதபோது மிகவும் வருத்தப்பட்டேன்.

“நண்பர் விஜய் அரசியலுக்கு வர்றாரு.. நானும் போறேன்னு அம்மா கிட்ட சொன்னேன். “அரசியல் ஒரு சாக்கடை, சாதி, மதம் இருக்கு, நீ அமைதியான ஆளு.. அரசியல் செட்டாகாதுனு" விஜய்கிட்ட அம்மா சொல்ல போறேன்னுசொன்னாங்க.

ரிசல்ட் வந்த உடனே அம்மாகிட்ட போய், அன்னைக்கு என்ன சொன்ன சாதி, மதத்த தாண்டி மக்கள் ஜெயிக்க வைக்க மாட்டாங்கன்னு சொன்ன, இன்னைக்கு பாரு நண்பர் ஜெயிச்சிட்டாருனு சொன்னேன்.

இப்ப என்ன சொல்றனு கேட்டேன், உடனே எங்க அம்மா, “அந்த புள்ள எல்லாத்தையும் மாத்திடுச்சு.. நீயும் போ கண்ணா” அப்படினு சொன்னாங்க” என சீமான், ரஜினிகாந்த், முதல்வர் விஜய் குறித்து பேசியுள்ளார்.

அதன் பின்னர், "இந்தக் காணொளியைப் பார்த்த பிறகு, உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் கமெண்ட் செய்யுங்கள்.

நீங்கள் "வேண்டாம்" என்று சொன்னால், நான் அரசியலில் நுழைய மாட்டேன், சமூகத்திற்கான எனது தன்னலமற்ற சேவையைத் தொடர்வேன். ஆனால் நீங்கள் ஆம் என்று சொன்னால், நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன். 

உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களுடன், எப்போது, யாருடன் இந்தப் பயணத்தைத் தொடங்க உள்ளேன் என்பதை நான் வெளிப்படுத்துவேன்" என தெரிவித்துள்ளார்.