"விஜயகாந்த் போட்டோவை பார்த்து ஆடிப்போய்ட்டேன்..எனக்கு மனசே சரியில்லை" - கண் கலங்கிய நடிகர் ராதாரவி
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவா 1980-90-கள், மற்றும் 2000-ஆண்டுகளில் கொடிக்கட்டி பறந்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த்.
சினிமாவை தொடர்ந்து தேமுதிக என்ற கட்சியை உருவாக்கிய விஜயகாந்த் முழுநேர அரசியலில் ஈடுபட்டார்.
அதன் பின் சந்தித்த முதல் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே தேமுதிக வெற்றி பெற்றாலும், அடுத்த தேர்தலில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகி அமர்ந்தது.
இவருடன் கூட்டணி வைக்க, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டின.
இதற்கிடையில், திடீரென்று விஜயகாந்த்திற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், அவர் அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கினார். இதனையடுத்து, கட்சியும் வீழ்ச்சி அடைந்தது.
இந்நிலையில், விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் சில வாரங்களுக்கு முன்பு வைரலானது. அந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் புகைப்படத்தில் அவர், உடல் மெலிந்து தோல் சுருங்கி ஆள் அடையாளம் காண்பதற்கே கடிணமான நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல நடிகர் ராதாரவி சமீபத்திய பேட்டி ஒன்றில், கேப்டன் விஜயகாந்தின் போட்டோவை பார்த்தப்படி கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
அவர், “சமீபத்தில் விஜயகாந்தின் போட்டோவை பார்த்தேன், நான் சாமி கும்பிடுவேன். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உண்டு. மக்களுக்கு அன்னதானம் செய்தவர் விஜயகாந்த், நிறைய தர்மம் செய்துள்ளார். அவருக்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது.
விஜயகாந்தின் கண்ணுப்பட போகுதய்யா படத்தை பார்த்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. விஜயகாந்தின் போட்டோவை பார்த்தும் அழுது கொண்டு தான் இருக்கிறேன்.
இத்தனை வருடங்கள் பழகிய விஜயகாந்தின் போட்டோவை பார்த்து என்னால் அடையாளம் கண்டுபிடிக்கவே முடியவில்லை.” என கவலையுடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “போட்டோவை பார்த்து ஆடிப்போய்ட்டேன். அவரை பார்க்க வேண்டும் என்று சுதீஷுக்கு போன் செய்தேன், அவர் எடுக்கவே இல்லை. ஒரு வழியாக விஜய் பிரபாகரனிடம் பேசினேன்,நன்றாக பேசினார்.
அப்பாவை பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு அம்மாவிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்றார். ஆனால் அதன்பிறகு பேசவே இல்லை.”
“முதலமைச்சர் எல்லாம் அவரை பார்த்தார்கள்..நானும் பார்க்க வேண்டும். நான் பார்த்தால் என்ன ஆக போகிறது என்று தெரியவில்லை.
விஜயகாந்த் என் நெருங்கிய நண்பர். அவருடைய அந்த போட்டோவை பார்த்ததில் இருந்து எனக்கு மனசே சரியில்லை. அவரை நேரில் சந்திக்க வேண்டும்..”என கண்கள் கலங்க பேசியுள்ளார் ராதா ரவி.