புனித் ராஜ்குமாரின் கடைசி படம் ‘ஜேம்ஸ்’ ஸ்பேஷல் போஸ்டர் வெளியானது - படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி படமான 'ஜேம்ஸ்' படத்தின் ஸ்பேஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் புனித் ராஜ்குமாரின் மூத்த சகோதரர்கள் சிவராஜ் குமார் மற்றும் ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார்.
இவரின் மரணம் கன்னட திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், அதையும் தாண்டி அவர் செய்த பல நல்ல விஷயங்கள் மக்களிடையே அவருக்கு பெரிய அளவிற்கு மரியாதையையும், அன்பையும் உருவாக்கி வந்தது.
இந்நிலையில், புனித்தின் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டர், குடியரசு தினமான இன்று வெளியாகி உள்ளது. ‘ஜேம்ஸ்’ படம் கன்னட திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள புனித்தின் ரசிகர்கள் அவரை கடைசியாக திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. புனித் ராஜ்குமாரின் கடைசிப் படம் ஜெம்ஸ் மார்ச் 17ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
வரும் மார்ச் 17ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை மாநிலத்தில் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று கர்நாடகா விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.
#James https://t.co/hcvW1A1A8c
— Sandalwood Loka (@SandalwoodLoka) January 26, 2022