முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தியாகராஜன்-பிரசாந்த்: என்ன காரணம் தெரியுமா?
நடிகர் பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும், முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர்.
கொரோனாவை தடுக்க தேவையானவற்றை செய்ய முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர். அவர்கள் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தியாகராஜன், பிரசாந்த் இருவரும் முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடும் சிறப்பாக இருப்பதாகவும், மிகவும் கடினமாக உழைத்து வருகிறார், கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது எனவும் தெரிவித்தனர்.