திடீர் அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் இருந்தபடி நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட புகைப்படம்

surgery prakash raj
By Fathima Aug 12, 2021 07:35 AM GMT
Report

தனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துவருகிறார் பிரகாஷ் ராஜ்.

கடந்த 9ஆம் தேதி அவருடைய வீட்டில் வழுக்கி விழுந்தததில், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பிரகாஷ் ராஜுக்கு, இடது கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 10ஆம் தேதி ஹைதராபாத் விரைந்தார்.

அங்கு தனக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து, பிரகாஷ் ராஜ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.