ஹாலிவுட்டில் நடிக்கும் பிரபல நடிகர் - ரசிகர்கள் உற்சாகம்

Hollywood Prakash Raj soon act
By Anupriyamkumaresan Oct 24, 2021 08:38 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தமிழில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ், ‌அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல வருடங்களாக தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தற்போது இவர், தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த, கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎப்-2, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், தனுஷுடன் மாறன் மற்றும் ஜவஹர் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஹாலிவுட்டில் நடிக்கும் பிரபல நடிகர் - ரசிகர்கள் உற்சாகம் | Actor Prakash Raj Soon Act In Hollywoo Movie

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள நேர்காணலில் ஒன்றில் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ், நெப்போலியன் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் பணியாற்றி உள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது பிரகாஷ்ராஜூம் இணைந்துள்ளார். விரைவில் அவர் நடிக்கும் ஹாலிவுட் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.