ஏழை குடும்பத்துக்கு ஜேசிபி வாங்கி கொடுத்த பிரபல நடிகர் - குவியும் பாராட்டு

நடிகர் பிரகாஷ் ராஜ் ஏழை குடும்பத்திற்கு ஜேசிபி வாகனத்தை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி தமிழ்,கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக உள்ள பிரகாஷ்ராஜ் தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அதற்கான வேலைகளில் பிஸியாக உள்ளார் பிரகாஷ் ராஜ் நிலையில் மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்னா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஜேசிபி பரிசளித்துள்ளார். தனது பிரகாஷ்ராஜ் பவுண்டேஷன் சார்பாக இந்த உதவியை அவர் செய்துள்ளார்.

இந்த போட்டோக்களை நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்