லட்டு பிரச்சனையை ஊதி பெரிதாக்கி.. பவன் கல்யானுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி !

Prakash Raj Pawan Kalyan Tirumala
By Vidhya Senthil Sep 21, 2024 05:58 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 நாட்டில் ஏற்கவே போதுமான அளவு வன்முறைகளும் பதற்றமும் மலிந்துள்ளது .

திருப்பதி 

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக லட்டுக்கள் வழங்கப்படுகிறது. இந்த லட்டுக்கள் தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யைப் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சை அரசியல் ரீதியாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pawan kalyan

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இதுபோன்ற பிரச்சினைகளை ஆராயத் தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு[ரக்ஷனா] வாரியம்'என்ற அமைப்பை நிறுவும் நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்து இருந்தார்.

திருப்பதி லட்டு விவகாரம் - மாட்டு கொழுப்பு நெய் தமிழ்நாட்டில் இருந்து சென்றதா?

திருப்பதி லட்டு விவகாரம் - மாட்டு கொழுப்பு நெய் தமிழ்நாட்டில் இருந்து சென்றதா?

இந்நிலையில் பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு நடிகரும் அரசியல் வாதியுமான பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இந்த விவகாரம் நீங்கள் துணை  முதலமைச்சராக உள்ள மாநிலத்தில் நடந்துள்ளது.

 பிரகாஷ்ராஜ்

உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியைப் பாருங்கள். அதைவிட்டுவிட்டு ஏன் இந்த பிரச்சினையைத் தேசிய அளவில் ஊதி பெரிதாக்கி அச்சத்தைப் பரப்புகிறீர்கள்.

லட்டு பிரச்சனையை ஊதி பெரிதாக்கி.. பவன் கல்யானுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி ! | Actor Prakash Raj Condemns Pawan Kalyans Comments

நாட்டில் ஏற்கவே போதுமான அளவு வன்முறைகளும் பதற்றமும் மலிந்துள்ளது .அதற்கு மத்தியில் ஆட்சி புரியும் உங்களின் நண்பர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.