நடிகர் பிரபுவிற்கு மூளையில் அறுவை சிகிச்சை - தற்போதைய நிலை என்ன?
நடிகர் பிரபுவிற்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பிரபு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் நடிகர் பிரபு. 80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபு, தற்போது அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.
68 வயதான பிரபு, தலைவலி மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை
அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், நடு மூளை தமனியில் பிளவு பகுதியில் உள்ள கரோட்டின் தமனியின் மேல் பகுதியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பிரபுவிற்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், நேற்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனது இல்லத்தில் ஓய்வு பெற்று வருகிறார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளநிலையில், பிரபு விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.