நடிகர் பிரபாஸுடன் கிருத்தி சனோன் காதல் - மாலத்தீவில் நிச்சயதார்த்தம்!
நடிகர் பிரபாஸுடன் கிருத்தி சனோனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
பிரபாஸ் காதல்
‘பாகுபலி’ என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ்(42). திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில், பிரபாஸ் தற்போது ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி சனோன் என்பவரை காதலிப்பதாகவும்,
இருவரும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்பட்டது. மேலும், இவர்களின் நிச்சயதார்த்தம் அடுத்த வாரம் மாலத்தீவில் நடைபெற இருப்பதாக சினிமா விமர்சகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததால் இந்த செய்தி மிக வேகமாக காட்டுத்தீ போல் பரவியது.
நிச்சயதார்த்தம்?
இதுகுறித்து பிரபாஸ் தரப்பினர், பிரபாஸ்- கீர்த்தி சனோன் நிச்சயதார்த்தம் மாலத்தீவில் நடைபெறவுள்ளது என்பது முழுக்க முழுக்க கற்பனையான ஒரு தகவல் என்றும் அதில் சிறிது கூட உண்மை இல்லை.
இருவரும் சக நடிகர் நடிகைகள், அதை தாண்டி அவர்கள் இடையே வேறு எந்த விதமான உறவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.