வலியால் துடிக்கும் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் - ரசிகர்கள் பிரார்த்தனை: என்ன நடந்தது?

Powerstar Srinivasan admitted in hospital
By Anupriyamkumaresan Nov 15, 2021 07:40 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பவர் ஸ்டார் சீனிவாசன். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான லத்திகா திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இவர் பவர் ஸ்டார் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.

வலியால் துடிக்கும் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் - ரசிகர்கள் பிரார்த்தனை: என்ன நடந்தது? | Actor Powerstar Srinivasan Admitted In Hospital

தற்போது அவர் நடிகை வனிதா விஜயகுமாருடன் பிக்கப் ட்ராப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். இவரை மீட்ட படக்குழு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் உடல் நலத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பவர்ஸ்டார் எந்த மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த பவர் ஸ்டாருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.