தவெகவில் இணையும் நடிகர் பார்த்திபன்? படு வைரலாகும் போஸ்ட்!
பார்த்திபன் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் புதுச்சேரியில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசுகையில், ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கு வரலாம். யாரும் கட்சி தொடங்கலாம். முதல்வர் பதவிக்கு யாரும் ஆசைப்படலாம். இதில் எந்த தவறுமே இல்லை.
ஒருவர் அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தும்போது பல்வேறு தடைகள் இருக்கும். ஜல்லிக்கட்டில் பல தடைகளை தாண்டிதான் மாடு பிடிக்க வேண்டும். அதேபோல அரசியலிலும் ஆட்சியை பிடிப்பது என்பது பெரிய விஷயம். நடிகர் விஜய் அவருக்கு ஏற்படுகிற தடைகளை தாண்டினால்தான் உண்மையான தலைவருக்கான அழகு வெளிப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
வைரல் போஸ்ட்
இந்நிலையில் இவர் தனது எக்ஸ் பக்கத்தில், நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள்.
நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்… pic.twitter.com/MzV00BS3b7
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 19, 2025
சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்.. அது கனவு! ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள்.
இப்படி சில பல! காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இதுதொடர்பான கமெண்டுகளுக்கு பார்த்திபன் அளித்த பதிலில், தவெகவில் சேரும் ஆசை இல்லை என்பதால் இதை இடுகிறேன் நண்பா! இருந்தால் கமுக்கமாக இணைந்திருப்பேனே! எனவும் குறிப்பிட்டுள்ளார்.