நடிகர் பார்த்திபன் மரணம்? பரவிய வதந்தி - அதிர்ந்து போன திரையுலம்

Tamil Cinema R. Parthiban Death
By Thahir 1 வாரம் முன்

நடிகர் பார்த்திபன் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்திக்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பார்த்திபன் மரணம்? பரவிய வதந்தி 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன். புதிய பாதை படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானார்.

இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் விருதுகளை வாங்கி குவித்தது.

சமீபத்தில் இரவின் நிழல் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றார்.

நடிகர் பார்த்திபன் மரணம்? பரவிய வதந்தி - அதிர்ந்து போன திரையுலம் | Actor Parthiban S Death Rumor Spread

இதற்கிடையில் சில தினங்கள் முன்பு முன்பு சென்னை சிறைவாசிகளுக்கு புத்தகங்களை மடிப்பிச்சை எடுத்தார் நடிகர் பார்த்திபன்.

பதிலடி கொடுத்த பார்த்திபன் 

இதனிடையே பார்த்திபன் இறந்துவிட்டதாக ஒரு யூடியூப் சேனல் வெளியிட்ட வதந்தி செய்திக்கு அவர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை. நடிகன் பற்றி செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை.

நெகடிவ்விட்டியை பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவேம் மக்களுக்கும் பரப்புவோம்! என அவர் பதிலடி கொடுத்துள்ளார்.