ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து- பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல.. நடிகர் பார்த்திபன் சொன்ன வார்த்தை!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரகுமான்
இந்தியா சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் கணவர் ஏ.ஆர் ரகுமானை விட்டுப் பிரிவதாக மனைவி சாய்ரா அறிவித்தார்.
மேலும் திருமணமாகிப் பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவு எனத் தெரிவித்து இருந்தார். இவரது அறிவிப்பு திரைத்துறையை மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பைத் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் எக்ஸ் தள பக்கத்தில் தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவித்து விவாகரத்தை உறுதிப்படுத்தினார்.
விவாகரத்து
இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமானின் விவாகரத்து குறித்து நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரிவு: இசை ஸ்வரங்கள் பிரிவதால் தான், பிறக்கும் ஒரு நாதமே... குடைக்குள் மழை' நானெழுதி கார்த்திக் ராஜா இசைக்க, இசையே பாடியது. பிரிவு என்பது துக்கம் மட்டுமல்ல, புதிய அமைதியாகவும் பிறக்கலாம்.
நெருக்கம் நிகழ்த்திய சொர்க்கத்தை விட, மூச்சு முட்டும் புழுக்கமாகவும் மாறியதைச் சற்றே மாற்றி, விலகி நின்று அவரவர் விருப்பம் போல வாழ இனி(ய) வழியுள்ளதா என சம்மந்தப்பட்டவர்கள் ஆராயலாம்.
ஊர் கூடி உறவைக் கொண்டாடி வழியனுப்புதல்போலே, ஊர் விலகி 'பிரிவு'என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.