பத்மாவுக்கு பாத பூஜை செய்த நடிகர் பார்த்திபன்
துப்பரவு பணியாளரான பத்மா 45 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை பாராட்டி அவருக்கு நடிகர் பார்த்திபன் பாத பூஜை செய்துள்ளார்.
வைரல் காணொளி
குப்பையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவின் செயலை பாராட்டி, நடிகர் பார்த்திபன் அவருக்கு பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து கௌரவித்தார்.
இதுகுறித்து பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் “தங்கத்தின் மதிப்பு ஏற ஏற மனிதத்தின் மரியாதை குறைந்து வருகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்ச ரூபாயை நெருங்கும் போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்” என பதிவிட்டுள்ளார்.

360 நாட்கள் கஷ்டப்பட்டு துப்பரவு பணி செய்யும் பத்மா குப்பையில் கிடந்த 360 கிராம் தங்கத்தை நினைத்து இருந்தால் எடுத்து இருக்கலாம்.
ஆனால் அதை செய்யாமல் நேர்மையுடன் உரியவிடம் ஒப்படைத்த காரணத்தினால் உலக மகா உன்னதமான மனிதராக உயர்ந்துள்ளார் என்று பாராட்டி உள்ளார்.

எத்திராஜ் மகளிர் கல்லூரி நிகழ்ச்சிக்கு Chief Guest ஆக பார்த்திபன் அழைக்கபட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர் பத்மாவையே Chief Guest ஆக அழைத்து, அவருக்கு பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி ‘உலக அழகி’ என்ற கிரீடத்தை சூட்டி மரியாதை செலுத்தி இருந்தார்.
தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 4, 2026
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை… pic.twitter.com/tTRtd6gLWP
வடக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றும் பேருந்துகளுக்கு இறுகும் பிடி : விடுக்கப்பட்ட அறிவிப்பு IBC Tamil
தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு IBC Tamil