'கருவுக்கே விஷம் வைப்பவர்' - திருமணத்துக்கு மறுத்த நெப்போலியனின் மனைவி!

Jiyath
in பிரபலங்கள்Report this article
தனது திருமணம் குறித்து நடிகர் நெப்போலியன் பேசியுள்ளார்.
நடிகர் நெப்போலியன்
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். தமிழ் மட்டுமல்லாமல் மலையாம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மேலும், சில ஹாலிவுட் படங்களிலும் நெப்போலியன் நடித்துள்ளார்.
இவர் நடித்த 'எட்டுப்பட்டி ராசா' படத்தில் இடம்பெற்ற 'பஞ்சு மிட்டாய் சேலை கட்டி' என்ற பாடல் இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. நெப்போலியன் கடந்த 1993-ம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உள்ளனர். தற்போது நெப்போலியன் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் "எனக்கு பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தபோது எனது மனைவி ஜெயசுதாவின் ஜாதகத்துக்கும், என்னுடைய ஜாதகத்துக்கும் 9 பொருத்தங்கள் சரியாக இருந்தது.
விஷம் வைப்பவர்
அதனால் என்னுடைய குடும்பத்தினர் அவரது குடும்பத்தை சந்தித்து விட்டு வந்தனர். பின்னர் பெண் பார்க்கப் போனபோது, மாப்பிள்ளை யார் என ஜெயசுதா கேட்டிருக்கிறார். அப்போது, சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறாரே நெப்போலியன், அவர்தான் மாப்பிள்ளை என்று கூறியுள்ளனர்.
உடனே ஜெயசுதா, "அய்யயோ.. அவர் கூடையெல்லாம் எனக்கு கல்யாணமே வேண்டாம்" என மறுத்துவிட்டார். ஏனென்று கேட்டபோது, "அவர் எஜமான் படத்துல வயித்துல இருக்க கருவுக்கே விஷம் வைக்கிறவரு. அவ்வளவு கொடுமக்காரர எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க" என்று சொல்லியிருக்கிறார்.
இல்லம்மா படத்தில் தான் அவர் அப்படி. நிஜத்தில் நல்ல மனிதர். நான் எல்லாவற்றையும் விசாரித்துவிட்டேன் என ஜெயசுதாவிடம் என்னுடைய மாமனார் பேசி புரியவைத்தார்" என்று நெப்போலியன் தெரிவித்துள்ளார்.