நடிகர் நாசர் தந்தை மரணம் - சோகத்தில் குடும்பம்!
நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை காலமானார்.
நடிகர் நாசர்
நடிகர் நாசரின் தந்தை மெகபூப் பாஷா. செங்கல்பட்டில் நகைகளைப் பாலிஷ் செய்து வந்தார். தந்தை சொன்னதற்காக தனக்கு விருப்பமே இல்லாத துறையில் நுழைந்த நாசர்

வில்லன், ஹீரோ, குணச்சித்தரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். தற்போது நடிகர் சங்க தலைவராக உள்ளார். இவரது சகோதரர் மற்றும் தந்தை செங்கல்பட்டில் வசித்து வருகின்றனர்.
தந்தை மறைவு
இந்நிலையில், நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார்.அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாசரின் நெருங்கிய சினிமா நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி அஞ்சலியில் பங்கேற்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil