வருங்கால மனைவி இவர்தான், கல்யாணம் எப்போது - மனம் திறந்த நாஞ்சில் விஜயன்
தனது திருமணம் குறித்து நடிகர் நாஞ்சில் விஜயன் மனம் திறந்துள்ளார்.
நாஞ்சில் விஜயன்
ரியாலிட்டி ஷோக்களின் மூலம் அறிமுகமானவர் நாஞ்சில் விஜயன். தொடர்ந்து சீரியல் பக்கமும் வந்தார். நகைச்சுவை திறமைகளை வைத்து தற்போது ஓரிரு படங்களிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைகளிலும் அடிபடுவார்.

நடிகை வனிதா விஜய்குமார் குறித்து யூ டியூபர் சூர்யாதேவி அவதூறு பரப்பியதாகச் சொல்லப்பட்ட பின்னணியில், இவர் இருந்ததாக கூறப்பட்டது. அதன்பின், சூர்யா தேவி கொடுத்த ஒரு புகாரின் பேரில் சில மாதங்களுக்கு முன்பு கைதும் செய்யப்பட்டார்.
திருமணம்
தொடர்ந்து, இவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது என இணையத்தில் செய்திகளும், புகைப்படங்களும் பரவிய வண்ணம் இருந்தது. இதுகுறித்து பேசியுள்ள அவர், தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டுதான் கல்யாணம் செய்துக்கணும்கிறதுல உறுதியா இருந்தேன்.
தங்கச்சி கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சது. இதுக்கு மேலயும் சினிமாவுல பெரிய ஹீரோ ஆகிட்டுதான் கல்யாணம் செய்துக்கணும்'னு இருந்தா ஸ்ட்ரெய்ட்டா அறுபதாம் கல்யாணம்தான் பண்ணனும்.
அதனாலதான் இப்ப வீட்டு அறிவுரைப்படி, நண்பர்கள் மூலமா அறிமுகமான பெண்ணையே திருமணம் செய்துக்கலாம்கிற முடிவுக்கு வந்தேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இவரது திருமணம் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி நடக்கவுள்ளது.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil