ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்த நடிகர் நாகேஷ் மற்றும் பிரபல எழுத்தாளர் - வெளியான தகவல்..!
பிரபல பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷ் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
நாகேஷ்
50-களில் இருந்து 90 வரை கதாநாயகன்களுக்கு சமமாக உச்சத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் நாகேஷ். அதிலும் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் இவரின் ரோல் மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறது.
அவரது காமெடி கலந்த உடல் பாவனை அனைவரையும் ஈர்த்தும் வந்தார். நாகேஷ் அவர்கள் கலைமாமணி, பிலிம்பேர், நம்மவர் படத்திற்காக தேசிய மற்றும் மாநில விருதும் பெற்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் படங்களில் குணச்சித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்து கடந்த 2009ல் அவரது 76 வயது உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் நடிகர் நாகேஷ்.
இவர் அளித்த பேட்டியில் இருந்து ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி பார்ப்போம்.
பிச்சை எடுத்த நாகேஷ்
நடிகர் நாகேஷும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனும் ஒருநாள் காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். "தொழுப்பேடு" என்ற ஊருக்கு இருவரும் வந்ததும் அங்கிருந்த ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரயில் வந்துபோக நேரமாகும் என்று அங்குள்ளவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதுவரை என்ன செய்வது என்று நாகேஷ் ஜெயகாந்தனிடம் கேட்க பிச்சை எடுக்கலாம் என்று ஜெயகாந்தன் பதிலளித்துள்ளார்.
அப்படியா அதுவும் நல்ல யோசனைதான் என்றார் நாகேஷ். ஆனால் இப்படியே போனால் யாரும் நம்மை பிச்சைக்காரர்கள் என நம்ப மாட்டார்கள் என்று கூறிய நாகேஷ் உடனே காரில் இருந்து ஒரு லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டாராம்.
பின்னர் அருகில் உள்ள ரோட்டோரத்தில் போய் அமர்ந்து கொண்டாராம் நாகேஷ். அதைப் பார்த்து வியந்த ஜெயகாந்தனும் அவர் பக்கத்தில் போய் அமர்ந்தாராம்.
இருவரும் சேர்ந்து அந்த வழியில் போவோர் வருவோர் என அனைவரிடமும் கை நீட்டி பிச்சை எடுத்துள்ளனர். அவர்களுக்கு சிலர் பிச்சையும் கொடுத்துள்ளனர். பின்னர் ரயில் வந்து சென்ற பிறகு அங்கிருந்து எழுந்துள்ளனர்.
அந்த பிச்சை எடுக்கும் போட்டியில் ஜெயகாந்தனுக்கு நிறைய வசூல் கிடைத்துள்ளது. எனவே "இதில் நீதான் வின்னர்" என்று நாகேஷ் ஜெயகாந்தனை இறுக்கி அணைத்துக் கொண்டாராம். இந்த சுவாரஸ்யமான நிகழ்வு அனைவரையும் ரசிக்க வைக்கும் படியாக உள்ளது.