விவாகரத்துக்குப் பின் நாகசைதன்யா வெளியிட்ட காதல் கடிதம் - சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி

actresssamantha actornagachaitanya
By Petchi Avudaiappan Nov 20, 2021 11:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் நாகசைதன்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதன்பிறகு சமந்தா பல்வேறு புதுபடங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 

அதேபோல் ஓய்வில் இருக்கும் நாகசைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ’என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்’ என்ற கேப்ஷனில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கிரீன் லைட் என்ற புத்தகத்தை பதிவு செய்துள்ள அவர், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.