போலீசிடம் வசமாக சிக்கிய நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் - ரசிகர்கள் அதிர்ச்சி

Samantha actornagachaitanya நாகசைதன்யா
By Petchi Avudaiappan Apr 12, 2022 05:46 PM GMT
Report

பிரபல நடிகர்  நாகசைதன்யாவுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யா டொயோட்டா காரில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதி வழியே சென்றுள்ளார். அவரது காரை சோதனை சாவடியில் வழிமறித்த போக்குவரத்து போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது அவரது காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்தியாவில் கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது மோட்டார் வாகன சட்டப்படி சட்டவிரோதம் ஆகும். ஏனெனில் கருப்பு ஸ்டிக்கரால் காரில் இருப்பது யார் என தெரியாத சூழல் ஏற்படுவதாகவும், இதனால் வாகனத்திற்குள் நடைபெறும் மறைமுக குற்றங்களை குறைக்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து நாகசைதன்யாவுக்கு  ரூ.715 அபராதமும் விதிக்கப்பட்டது. இதே காரணங்களுக்காக ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மஞ்சு மனோஜ் மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் முன்னால் அபராதம் கட்டியுள்ளனர். 

நாகசைதன்யாவும், அவரது காதல் மனைவி சமந்தாவும் 3 ஆண்டு திருமண வாழ்வுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.