மக்களிடம் இருந்து விடைபெற்றார் நடிகர் மயில்சாமி - ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் உடல் தகனம்

Tamil Cinema Death Mayilsamy
By Thahir Feb 20, 2023 06:33 AM GMT
Report

பிரபல நடிகர் மயில்சாமியின் உடல் வழபழனியில் உள்ள ஏவிஎம் மின்மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

மயில்சாமி உயிரிழப்பு 

தீவிர சிவ பக்தரான 57 வயதான நடிகர் மயில்சாமி, சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சிவராத்திரியையொட்டி சென்றுள்ளார்.

சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

மக்களிடம் இருந்து விடைபெற்றார்

இதனால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். நடிப்பு மட்டுமின்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக திகழ்ந்து வந்தவர் மயில்சாமி.

Actor Mylaswamy bid farewell to people

கொரோனா நோய் பெருந்தோற்றின் போது தனது பகுதி மக்களுக்கு ஓடோடி உதவி செய்தார். தன் வாழும் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தினம் தோறும் மாலை போட்டு வணங்கி வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

நடிப்புகளிலும் தனது அசாத்திய நடிப்பால் பலரின் அன்பை பெற்றார். மக்களுக்கு ஓடோடி சென்று உதவி செய்து வந்த மயில்சாமி இன்று மக்களிடம் இருந்து விடைபெற்றார். அவரது உடல் வடபழனி மின்மாயானத்தில் தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட போது சாலையின் இருப்புறங்களிலும் நின்றிருந்த பொதுமக்கள் மலர் துாவி இறுதி மரியாதை செலுத்தினர்.  நடிகர் மயில்சாமிக்கு  ரசிகர்கள் கண்ணிர் மல்க பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர். 

பின்னர் மின் மயானம் கொண்டு வரப்பட்ட மயில்சாமியின் உடலுக்கு முறையான இறுதிச்சடங்குகளுக்கு பின் எரியூட்டப்பட்டது.