முதல்வருக்கு நடிகர் முத்துக்களை வெளியிட்ட காணொளி பதிவு

Vijay C Joseph Vijay
By Manchu May 25, 2026 09:29 AM GMT
Report

நடிகர் முத்துக்காளையின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது முத்துக்காளை வெளியிட்ட காணொளி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

நடிகர் முத்துக்காளை

தமிழ் சினிமாவில் தனது நடிப்பினால் ரசிகர்களை அதிகம் கவர்ந்த முத்துக்காளையின் மனைவி மூளையில் ரத்த கசிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சுமார் 19 நாட்களாக சிகிச்சையில் இருந்த அவரை மேல் சிகிச்சை செய்வதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்றும் மனைவியைக் காப்பாற்ற உதவி செய்யுமாறு தமிழக முதல்வர் விஜய்யிடம் காணொளி மூலம் கோரிக்கை வைத்திருந்தார்.

முதல்வருக்கு நடிகர் முத்துக்களை வெளியிட்ட காணொளி பதிவு | Actor Muthukalai Thank Cm Vijay Emotional Video

முத்துக்காளையின் கோரிக்கையை அவதானித்த முதல்வர் உடனே உதவி செய்துள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போனில் பேசியும், ராஜ்மோகனை நேரில் வந்தும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக இரண்டு நாட்கள் கழித்து அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் செய்த உதவி இப்படி பலனளிக்காமல் போய்விட்டதே என மக்கள் கவலையில் இருந்தனர்.

அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி... காரணம் என்ன?

அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி... காரணம் என்ன?

முத்துக்காளையின் புதிய காணொளி

மனைவியின் மனைவிற்கு பின்பு நடிகர் முத்துக்காளை நன்றி தெரிவித்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தனது மனைவி இறந்த விடயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்... இந்த நேரத்தில் இந்த வீடியோ வெளியிடுவதற்கு காரணம், தனது மனைவிக்காக காணொளி ஒன்றினை வெளியிட்டேன்.

அதனை அவதானித்த முதலமைச்சர் தாமதிக்காமல் அவரது சிகிச்சைக்கு உதவி செய்தார். ஆனால் துரதிர்ஷ்டம் காரணமாக மனைவி உயிர் பிழைக்கவில்லை.

முதல்வருக்கு நடிகர் முத்துக்களை வெளியிட்ட காணொளி பதிவு | Actor Muthukalai Thank Cm Vijay Emotional Video

எனது கஷ்டத்தினை புரிந்து முதல்வர் மற்றும் அமைச்சர் ஆதவ், ராஜ் மோகன் செய்த உதவிக்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்

முத்துக்காளையின் மனைவி இழைப்பினை எதுவும் சரிசெய்ய முடியாத நிலையிலும், தனக்கு உதவியவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறியிருப்பது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலரும் முத்துக்காளைக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.