உதவி கேட்ட மாணவன் - தீட்டி தீர்த்த பிரபல நடிகர்

Actor mukesh Kerala MLA Mukesh
By Petchi Avudaiappan Jul 05, 2021 01:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

உதவி கேட்ட மாணவனிடம் கடுமையாக நடந்து கொண்ட நடிகர் முகேஷ் எம்.எல்.ஏவுக்கு எதிராக கேரளா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் சட்டசபைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக பிரபல நடிகர் முகேஷ் பதவி வகித்து வருகிறார். செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட விஷ்ணு என்ற 10ம் வகுப்பு மாணவர் தனது நண்பருக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஒரு செல்போன் வாங்க உதவி கோரியதாக கூறப்படுகிறது.

மாணவன் 3 முறை அழைக்க தொலைபேசியை எடுத்து மீண்டும் அழைப்பதாக கூறி உள்ளார். பின்னர் தொடர்புகொண்ட முகேஷ் மாணவனை கண்ணா பின்னா என்று அந்த மாணவனை திட்டியுள்ளார். அடித்து விடுவேன் என்றும் கூறி உள்ளார்.

இந்த ஆடியோ பதிவு வெளியாகி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விஷ்ணு தனது உள்ளூர் எம்.எல்.ஏ.வை அழைத்திருக்க வேண்டும், என்னை அல்ல என்று முகேஷ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பில் முகேசுக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க காங்கிரஸ் கட்சி போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.