விஜய்க்கு அண்ணனாக களமிறங்கும் மைக் மோகன் - வெளியான சுவாரஸ்ய தகவல்

vamsi Thalapathy66 ActorVijay RashmikapairsVijay MicMohan ActorMohan
By Swetha Subash Apr 18, 2022 01:02 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

தமிழில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.

விஜய்க்கு அண்ணனாக களமிறங்கும் மைக் மோகன் - வெளியான சுவாரஸ்ய தகவல் | Actor Mohan To Act As Vijays Brother In Next Film

காதல் படமாக அமையவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்நிலையில், தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணனாக 80-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் மைக் மோகன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கு அண்ணனாக களமிறங்கும் மைக் மோகன் - வெளியான சுவாரஸ்ய தகவல் | Actor Mohan To Act As Vijays Brother In Next Film

மோகன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது ஹரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.