KGF படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்... ரசிகர்கள் சோகம்

By Petchi Avudaiappan May 07, 2022 08:32 AM GMT
Report

கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னட திரையுலகில்  நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக பல ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட பல மொழி படங்களில் நடித்துள்ள மோகன் ஜுனேஜா சூப்பர்ஹிட் படமான கேஜிஎப் 1 மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரு பாகங்களிலும் நடித்திருந்தார். 

கேஜிஎஃப் படத்தில் வரும் ராக்கி பாய் பில்டப் காட்சி ஒண்றில் -கேங்க கூட்டிட்டு வர்ரவன் கேங்ஸ்டர், ஒத்தைய வர்ரவன் மான்ஸ்டர்" என அவர் பேசும் வசனம் பெரும் புகழை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதேபோல் சீரியல்களிலும் நடித்திருந்த மோகன் ஜுனேஜா நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அவர் உயிரிழந்தார். மோகனின் மரணம் ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் சமூக ஊடகம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.